ஒரு கச்சேரிக்கு சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமி இத்தனை லட்சம் சம்பளம் வாங்குகிறார்களா?- அவர்களே கூறிய விவரம்

சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் எத்தனையோ பாடகர்கள் வளர்ந்துள்ளார்கள். தமிழை தாண்டி மற்ற மொழி பாடல்களையும் பாடி சாதித்து வருகிறார்கள்.

அந்த நிகழ்ச்சியில் மக்கள் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களின் மனதையும் கவர்ந்தவர்கள் செந்தில்-ராஜலட்சமி. இப்போது இவர்கள் பல நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது என பிஸியாக இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் தான் அதிக சம்பளம் கேட்டு பாடுகிறார்கள் என்று செய்தி. இதற்கு இருவரும் ஒரு பேட்டியில் பேசும்போது, ஒரு கச்சேரிக்கு நாங்கள் 1 லட்சம் வாங்குகிறோம்.

அது முழுவதும் எங்களுக்கு மட்டும் இல்லை, எங்களுடன் பாடும் கலைஞர்கள், வாசிப்பவர்கள் என எங்கள் குழுவிற்கு சேர்த்து தான் அவ்வளவு பணம் என்று கூறியுள்ளனர்.

 

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *