வேகக் கட்டுப்பாட்டையிழந்து வேலியில் மோதிய குடும்பஸ்தர் பலி! (படங்கள்)

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வேலி மீது மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த சம்பவம் கிளிநொச்சி- வின்சன் வீதி 3ம் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் அதே இடத்தைச்சேர்ந்த சுந்தரம் மகேந்திரம் (வயது-45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இறந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *