பிரித்தானியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 106 வயது மூதாட்டி! வெளியான புகைப்படம்

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,000-ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,000-ஐ தாண்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 761 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது நேற்றை விட குறைவு(நேற்று 778 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது).

NHS இங்கிலாந்து 651 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இதில் அடையாளம் தெரியாத 20 வயது இளைஞன் எனவும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 110 பேர் இறந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு அரசாங்கங்களும் வெவ்வேறு நேரங்களில் தங்கள் சொந்த தரவுகளை பதிவு செய்வதால், தினசரி புள்ளிவிவரங்கள் வரிசையாக இல்லை. இதனால் சுகாதாரத் துறையின் உண்மையான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விட சற்றே குறைவாக உள்ளது.

இதன் மூலம் பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,000-ஐ நெருங்கவுஇது குறித்து வெளியாகியுள்ள செய்தியில், கடந்த டிசம்பர் மாதம் இடுப்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த Connie Titchen மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் நிமோனியா என சந்தேகிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக Sandwell மற்றும் West Birmingham NHS அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

மேலும், Connie Titchen கூறுகையில், நான் இந்த வைரஸை எதிர்த்துப் போராடியது மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன். எனது குடும்பத்தைப் பார்க்க என்னால் காத்திருக்க முடியாது என்று கூறியுள்ளார்.ள்ளது.

இதற்கிடையில் கொரோனா வைரஸால் சிகிச்சை பெற்று வந்த Connie Titchen என்ற 106 வயது மூதாட்டி ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *