திடீர் விஜயமாக யாழ்ப்பாணம் செல்கின்றார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட விமானம் மூலம் செல்லும் அவர், யாழ்ப்பாணம் – பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தில் இராணுவ உயிரதிகாரிகள், படை வீரர்களுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன், வடக்கில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில ஆராய்வார்” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *