வெளிநாடுகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் கொரோனாவுக்குப் பலி!

யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து லண்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் வாழும் தமிழர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.

அத்துடன் பலர் இவ் வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரான்ஸ்
இந் நிலையில், யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Villeneuve saint georges இனை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் நவரத்தினம் (வயது 52) இன்று (15) புதன்கிழமை மாலை உயிரிழந்தார் .

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

தெய்வேந்திரன் நவரத்தினம்-பிரான்ஸ்

லண்டன்
இதேவேளை யாழ். உரும்பிராய் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான தயகுமார் மருதலிங்கம் (58 வயது) அவர்கள் நேற்று செவ்வாய்கிழமை (14) கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

தயகுமார் மருதலிங்கம்-லண்டன்

யாழ்ஒளி


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *