யாழ். பூநகரியில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

யாழ். பூநகரி வாடியடி பொது சந்தை புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அடிக்கல் நாட்டி வைத்திருந்தார்.

குறித்த நிகழ்வு பிரதேசசபையின் ஞானிமடம் வட்டார உறுப்பினர் வி.ஜெயக்காந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் முயற்சியால் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டிலேயே குறித்த கட்டடம் அமைய பெறவுள்ளது.

இதில் பூநகரி பிரதேசசபையின் தவிசாளர் அ.ஐயம்பிள்ளை, பச்சிலைப்பள்ளி தவிசாளர் சு.சுரேன், பிரதேச செயலாளர், பிரதேச சபையின் செயலாளர் க.கம்சநாதன், பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன், உப தவிசாளர் சி.சிறிரஞ்சன், உறுப்பினர்களான இ.செல்வராசா, பூபாலசிங்கம், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உப தவிசாளர் மு.கஜன், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் யோ.தனராஜ், முழங்காவில் அமைப்பாளர் த.குவேந்திரன், பூநகரி பொலிஸ் பொறுப்பதிகாரி அதிகாரி, வர்தக சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *