டோனியை அவசரப்பட்டு ஓய்வு பெற வைத்து விடாதீர்கள்! அவரின் திறமை… ஜாம்பவான் அளித்த ஆதரவு

மகேந்திர சிங் டோனியால் இந்திய அணிக்கு இன்னும் கணிசமான பங்களிப்பை அளிக்க முடியும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நாசர் உசேன் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

அவர் சர்வேதச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறு வாரா என்பது குறித்து எதுவும் சொல்லாமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

கொரோனா அச்சத்தால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் ரத்தாகும் சூழல் காணப்படுகிறது. ஐ.பி.எல். போட்டி நடக்காமல் போனால் டோனியின் மறுபிரவேசம் நிச்சயம் சிக்கலாகி விடும்.

இந்த நிலையில் 38 வயதான டோனிக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான நாசர் உசேன் குரல் கொடுத்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், ஒருமுறை டோனி ஓய்வு பெற்று விட்டால், அதன் பிறகு அவரை மீண்டும் அணிக்கு கொண்டு வர முடியாது. கிரிக்கெட் விளையாட்டில் உலகமே போற்றக் கூடிய ஒரு சில ஜாம்பவான்களே இருக்கிறார்கள்.

அத்தகைய மகத்தான வீரர்களை அரிதாக, அதாவது தலை முறைக்கு ஒருவரைத் தான் பார்க்க முடியும். அப்படிப்பட்ட டோனியை அவசரப்பட்டு முன்கூட்டியே ஓய்வு பெற வைத்து விடாதீர்கள். டோனியின் மனதில் என்ன உள்ளது என்பது அவருக்கு மட்டுமே தெரியும். எது எப்படியோ அவர் மீண்டும் களம் இறங்குவது தேர்வாளர்களின் கையில்தான் உள்ளது.

நான் டோனியை பார்த்தவரையில், அவரால் இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னும் நிறைய பங்களிப்பு அளிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

அவரிடம் இன்னும் திறமை இருக்கிறது என கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *