யாழில் கொரோனா தடுப்புக்கு ஒத்துழைக்காத சுகாதார சேவைகள் பணிப்பாளர் திடீர் இடமாற்றம்!

யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஏ.தேவநேசன் கொழும்பு சுகாதார அமைச்சினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்தவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன், மாகாணப் பணிக்கு மேலதிகமாக யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியையும் ஆற்றுவார்.

அதேவேளை மருத்துவர் குமாரவேல், யாழ்ப்பாண மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் கடமையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டம் நடைமுறையில் உள்ள காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியடனே அவசியமான இடமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

இருப்பினும் இந்த இடமாற்றத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதி இதுவரையில் பெறப்படவில்லை.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழப்பு வழங்குவதில்லை என்று கொழும்பு சுகாதார அமைச்சுக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த இடமாற்றம் திடீரென மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கொழும்பு சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நன்றி
யாழ்ஒளி


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *