யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பலாலி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வு கூட பரிசோதனையில் மேலும் இருவருக்கும் கொரோனாத் தொற்று இருப்பதாக உறுதி செய்யயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மேலும் இருவருக்கு தற்போது வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் மிகவும் அவதானமாக அரசாங்கத்தினது அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும் எனவும் யாழ். போதனா பணிப்பாளர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இதேவேளை, இலங்கையில் இது வரையில், 146 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு மூவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 21 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர். மேலும் 126 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா! சுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்தவர்கள் என தகவல்

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மொத்தமாக 4 பேர் யாழில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலைவரம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவிக்கையில்,

“இன்று பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வுகூட பரிசோதனையில் மேலும் இருவருக்கு ‘கொரோனா’ தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன் இன்று மாலை ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஆகவே, இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 10 பேரில் மூவருக்குக் ‘கொரோனா’ தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இவர்கள் அனைவரும் ஒரு கிழமைக்கு மேலாக அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். இம்மூவரும் சுவிஸ் மத போதகருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் மொத்தமாக இதுவரை 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலாவது தொற்றாளரும் சுவிஸ் மத போதகரை நேரில் சந்தித்து உரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, கொரோனா தொற்று வியாதியானது எந்தவிதமான அறிகுறிகள் இன்றி சிலரிடையே <காணப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

எனவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். சுகாதார அமைச்சினதும் அரசினதும் அறிவுரைகளை ஏற்று நடந்துகொள்ள வேண்டும்” – என்றார்.

இன்று பலாலி பகுதியில்தான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வு கூட பரிசோதனையில் மேலும்…

Posted by Thangamuthu Sathiyamoorthy on Rabu, 1 April 2020

நன்றி
யாழ்ஒளி


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *