அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சட்டம் ஒழுங்கு தொடர்பில் பொதுமக்கள் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

2019ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க அவசரகால ஒழுங்குவிதியின் ஒழுங்குவிதி 32 க்கு அமைய ஒருவர் வாய்மொழி மூலமோ அல்லது வேறேதேனும் வழிகள் மூலமோ பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படத்துதல் அல்லது பொய் பரப்பரைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அவருக்கு 3 மாதங்களிலிருந்து 5 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன் தண்டப்பணமும் அறவிடப்படும்.

அதேபோன்று, 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்தேச உடன்பாட்டொழுங்கு (கு.அ.உ.ச.உ.) சட்டத்தின் பிரிவு 3(1)இன் படி ஒருவர், வன்முறையை தூண்டுதல் அல்லது முரண்பாட்டை ஏற்படுத்தல் என்பதுடன் இன அல்லது மத ரீதியில் விரோதத்தை வளர்க்கும் பட்சத்தில் அவருக்கு 10 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை வழங்கப்படும்.

இதேவேளை, 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க, பயங்கரவாத தடுப்பு 9தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பிரி்வு 2(1) (ஏ)இற்கு அமைய ஒருவர் வாய்மொழிச் சொல் அல்லது வாசிக்கப்பட்ட கருத்து அல்லது சைகைகள் அல்லது கட்புலனாகும் காட்சிகள் மூலம் வெவ்வேறு சமூகத்தினரிடையே வன்முறைச் செயல்களை புரியச் செய்தல் அல்லது சமய ஒற்றுமை காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தல் போன்றவற்றுக்காக 5 ஆண்டுகளுக்குக் குறையாததும் 20 ஆண்டுகளுக்கு மேற்படாததுமான சிறைத்தண்டனை வழங்கப்படும்.

எனவே, மேற்கூறப்பட்ட தவறொன்றக்கு பொருந்தக்கூடிய ஏதேனும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஒருவர் மீது குறிப்பிடப்பட்ட சட்டமுறைகளின் படி வழக்குத் தொடரப்படும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவ வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையினையடுத்து, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையினை குழப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை தடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழமை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் மிக அவதானத்தோடும், கவனமாகவும் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *