ஐ.நாவுக்கு அழுத்தம் கொடுப்பதை சம்பந்தன் உடன் நிறுத்தவேண்டும்! அரசாங்கம் கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கைப் பிரஜையாகக் இருந்து கொண்டு இந்த நாட்டுக்கு ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று கூறி வருகின்றார்.

இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படிக் கருத்துரைப்பதை சம்பந்தன் உடனடியாக நிறுத்த வேண்டும்.”

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன இவ்வாறு வலியுறுத்தினார்.

“நல்லாட்சி அரசு ஐ.நா. தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி இலங்கையின் கௌரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. நாம் அதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிப் பொறுப்பேற்று நூறு நாட்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்த நூறு நாட்களுக்குள் கொள்கை ரீதியாக பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அவற்றில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு வழங்கிய இணைஅனுசரணையிலிருந்து விலகுவதாக எடுத்த முடிவை சிறந்ததாகக் கருத முடியும்” எனவும் அவர் கூறினார்.

“இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளியில் இருக்கும் எவருக்கும் அதிகாரம் கிடையாது. அதனடிப்படையிலேயே நாம் ஐ.நா. தீர்மானங்களிலிருந்து விலகத் தீர்மானித்தோம்.

போர் தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாமே விசாரணைகளை முன்னெடுத்து தீர்வைக்க காண்போம்” எனவும் அவர் தெரிவித்தார்.

“இலங்கையில் உள்ளக விசாரணைகள் இடம்பெறுவதை ஜே.வி.பி. ஏற்றுக்கொள்கின்றதா? இல்லையா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *