விரைவில் ஆரம்பமாகும் காங்கேசன்துறை துறைமுக நிர்மாணப் பணிகள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைத் துறைமுக நிர்மாணத்திற்கான கள ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளத் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

இத்தகவலை அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

கள ஆய்வின் பின்னர் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும், சுமார் நான்கு வருடங்கள் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுமெனவும் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்தார்.

அதன் பின்னர் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் கப்பல் சேவையை முன்னெடுக்க முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் , இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக நடவடிக்கைகளை காங்கேசன்துறை துறைமுகத்தினூடாக மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்திய எக்ஸிம் வங்கியின் (Exim Bank) நிதியுதவியுடன் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *