காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இது தொடர்பாக முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்துக்காக துறைமுகத்தை அண்டியுள்ள 50 ஏக்கர் காணி பெற்றுக் கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இந்தநிலையில் 15 ஏக்கர் அரச காணியையும், 35 ஏக்கர் தனியார் காணியையும் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தனியார் காணிகளை பெற்றுக்கொள்ளும்போது அதற்கான உரிய நட்டஈடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.

இந்த துறைமுகம் மேம்படுத்தப்பட்டால் வடக்கின் மக்கள் தமது உற்பத்திகளை நாடு முழுவதும் விநியோகிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் அமைச்சர் ஜோன்சன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *