முல்லைத்தீவில் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாங்குளம் பாலைப்பாணி பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள குளமொன்றுக்கு அருகிலிருந்து இன்று அதிகாலை அவரின் சடலம்மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த நபர் உள்நாட்டு துப்பாக்கி மூலம் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான ஜெயா என்பவரே இவ்வாறு சடலமாகக் மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *