கிடப்பில் போட்டப்பட்ட யாழ் பெருந்தெருக்களின் அபிவிருத்தி! இந்தியாவிடம் கை மாறியதால் ஏற்பட்டநிலை

யாழ்ப்பாண பெருந்தெருக்களின் அபிவிருத்தி சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு கைமாறியதால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மானிப்பாய், காரைநகர், வழுக்கையாறு, புங்குடுதீவு, குறிகாட்டுவான், யாழ்ப்பாணம்_பொன்னாலை பருத்தித்துறை ஆகிய பெரு வீதிகளின் மறுசீரமைப்பு பணிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட பின்னர் அவை கைவிடப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வீதிகளின் மறுசீரமைப்பு பணிக்கான ஒப்பந்தம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் புனரமைப்பு தொடர்பில் இந்திய அரசு கரிசனை செலுத்தியது.

இதனையடுத்து இந்திய நிறுவனத்திடம் இவற்றை வழங்க ரணில் அரசின் அமைச்சரவை தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் குறித்த அபிவிருத்தி பணிகளை இந்தியா பொறுப்பெடுத்த பின்னர் மறுசீரமைப்பு பணிகள் அப்படியே கைவிடப்பட்டுள்ளதுடன் அடுத்தகட்ட நகர்வுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடந்த 4 ஆண்டுகளாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பல்வேறு அபிவிருத்தித்திட்ட கூட்டங்களில் ஆராயப்பட்டன.

குறித்த வீதிகளை மறுசீரமைப்பதற்கான கேள்வி கோரல்கள் மேற்கொள்ளப்பட்டபோது சீன நிறுவனம் குறைந்த தொகைக்கு பணிகளை முன்னெடுக்க முடியும் என கூறியது. இதனையடுத்து சீன நிறுவனத்துக்கு வீதி மறுசீரமைப்புப் பணிக்கான ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை தீர்மானித்தது.

அதன்பின்னர் குறித்த அபிவிருத்தி தொடர்பில் இந்தியா தலையீடு செய்ததை அடுத்து சீனாவிடமிருந்து மீளப்பெறப்பட்டு இந்தியாவுக்கு அவற்றை ஒப்படைக்க அரசு தீர்மானித்த நிலையில் அதற்கான அமைச்சரவை பத்திரமும் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் அனுமதியும் பெறப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் சீனாவிடமிருந்து இந்தியா இதனைப் பொறுப்பேற்ற பின்னர் சில நகர்வுகள் இடம்பெற்றபோதும் ஆட்சி மாற்றத்த்தின் பின்னர் குறித்த பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *