இதயம் வருடும் மெல்லிசை….” உன்ன நெனச்சி ” வீடியோ பாடல் ரிலீஸ் !

பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த சைக்கோ படத்தின் ” உன்ன நெனச்சி ” வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உலகம் முழுவதும் கடந்த 24ம் தேதி வெளியான திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வரும் சைக்கோ கதாப்பாத்திரம் “புத்தர்-அங்குலிமாலா”வின் கதையை கருவாக கொண்டுள்ளது என படத்தின் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்னதாகவே சூப்பர் ஹிட் அடித்தது. டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதுடன் நல்ல வசூலை எட்டியுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒட்டுமொத்த ரசிகர்கள் பேவரைட் லிஸ்டில் இடம் பிடித்த ” உன்ன நெனச்சி ” வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இளைய ராஜாவின் இசையில் இந்த பாடலை கேட்ட அனைவரும் உருகி வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *