ஜனாதிபதி செயலணிக்கு யாழ் பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நியமனம்!

தேசிய வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணிக்கு யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சுப்பிரமணியம் சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அவர் தமது கடமைகளை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் வடக்கின் வறுமை தங்களின் இந்த பொறுப்பின் பின்னாவது குறையவேண்டும் எனவும் குறிப்பாக கிளிநொச்சி மக்களின் வறுமை குறையவேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் ஒரு பொருத்தமான பதவிக்கு யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியியல் பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு பலரும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *