வவுனியாவில் இராணுவம் – பொலிஸ் விசேட சோதனை

வவுனியாவில் ஏ9 வீதியில் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையினை இன்று காலை தொடக்கம் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா புளியங்குளம், ஓமந்தை‌ மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவமும் இணைந்து தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன் சந்தேகத்திற்கிடமான வீதியால் செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்ததுடன் மோப்ப நாயின் மூலமும் சோதனையினை மேற்கொண்டிருந்தனர்.

இலங்கை பாதுகாப்பை பலப்படுத்தும் முகமாக ஜனாதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு பலப்படுத்துமாறு கூறியதனையடுத்து பொதிகளுடன் வருபவர்களிடமும் சந்தேகத்திற்கிடமான பஸ்களை சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே இன்று புளியங்குளம், ஓமந்தை அண்மித்த பகுதியில் காலை 7.30 மணியில் இருந்து இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *