யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவியொருவர் கொலை! கொலையாளி கைது

2ஆம் இணைப்பு

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் மருத்துவ பீட மாணவி ஒருவர் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருவளை பகுதியைச் சேர்ந்த எச்.டி.ஆர். காஞ்சனா என்பவரே இவ்வாறு கழுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பண்ணை கடற்கரைப் பகுதியில் இன்று மதியம் 2.30 மணியளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக் கொலை தொடர்பில் விசாரணை செய்யப்பட்டபோது தெரியவந்துள்ள தகவலின்படி,

கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது கணவன் கடற்கரைப் பகுதிக்கு சென்றுள்ளனர். அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிலத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். அதன்போது, சிறிய கத்தி ஒன்றினால், பெண்ணின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார்.

இருவரும் பேருவளையைச் சேர்ந்தவர்கள் எனவும் பெண்ணின் கணவரான இராணுவ சிப்பாய், பரந்தன் இராணுவ பொலிஸ் பிரிவின், மருத்துவ வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவந்தவராவார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு கடந்த 4 வருடங்களிற்கு முன்னர் இந்த இராணுவ சிப்பாயுடன் பதிவுத் திருமணம் இடம்பெற்றதாகவும், பின்னர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கற்கும் போது வேறொருவருடன் காதல் ஏற்பட்டதால், அதை அறிந்த கணவனான இராணுவ சிப்பாய், பெண்ணை அழைத்து, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பண்ணை கடற்கரையில் நின்றவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் பொலிஸார் பெண்ணின் சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன், இராணுவ சிப்பாயைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முன்னைய பதிவு

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

பேருவளை பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கிளிநொச்சி – பரந்தன் இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *