சர்வமதத் தலைவர்களை சந்தித்த வட மாகாண ஆளுநர்!

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், நல்லை ஆதீன குருமுதல்வர், யாழ் நாக விகாரை விகாராதிபதி மற்றும் இஸ்லாமிய மௌலவி ஆகியோரை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது வட மாகாணத்தில் தன்னால் முன்னெடுக்கப்படவுள்ள பணிகளை சர்வமத தலைவர்களுக்கு எடுத்துரைத்த ஆளுநர், வட மாகாணத்தின் நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கடந்த 2ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் யாழ் மறைமாவட்ட ஆயரை நேற்று முன்தினம் சந்தித்து ஆசி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *