கைது செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர்களின் விடுதலை உறுதி: கலந்துரையாடலில் இணக்கம்

கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனர் ஆகியோரை விடுவிக்க ஜனாதிபதி செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமநாதனின் ஏற்பாட்டில், ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்ன மற்றும் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட ஆகியோருடன் இன்று(10) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ். மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ரவிராஜ், சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி ஐங்கரன், மாணவ ஆலோசகர் கலாநிதி றாயுமேஸ் ,யாழ் பல்கலைகழக பீடங்களின் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி கலந்துரையாடலில் இணைந்திருந்தனர்.

ஜனாதிபதியினால் , ஜனாதிபதி செயலாளரின் ஊடாக சட்டமா அதிபருக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைய வருகின்ற திங்கட்கிழமை சட்டமா அதிபரின் அறிக்கை யாழ் மாவட்ட நீதிபதிக்கு வழங்கப்பட்டு மாணவர்களின் விடுதலை உறுதியாகி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *