யாழில் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற பல்கலைகழக மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

நோன்பு நோற்பதற்காக ஷகர் உணவிற்கு சென்ற பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய கோழி சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது.இன்று யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட ஐந்துசந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்டவரால் உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்ட போதிலும் அதற்கு பணம் அறவிட்டு பல்கலை மாணவனை நாளை வருமாறு உரிமையாளர் திருப்பி அனுப்பியுள்ளார்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளில் உள்ள உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள்,தரமற்ற உணவு விற்பனை விலைக்கட்டுப்பாடு இன்றி விற்பனை அதிகமாக நடைபெற்று வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் புதிய,பழைய உணவகங்கள் ஆரம்பத்தில் நன்றாக சுகாதார விடயங்களில் அக்கறை காட்டிக்கொண்டு பின்னர் அவற்றை மீறி நடக்கின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *