முத்திரை பதித்தது யாழ். இந்து கல்லூரி! கணிதம், உயிரியல், வர்த்தகம் பிரிவில் முதலிடம்

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கணிதம், உயிரியல், வர்த்தகம் பிரிவில் முதலிடம் பெற்று யாழ். இந்து கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

2019ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி வரை நடைபெற்றது.

நாடு தழுவிய ரீதியில் 2,678 பரீட்சை மத்திய நிலையங்களில் 337,704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர். இந்நிலையில், க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டிருந்தன.

வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில், ஒரு மாவட்டத்தில் கணிதம், உயிரியல், வர்த்தகம் போன்ற மூன்று பிரிவுகளிலும் மாவட்ட ரீதியில் முதலிடத்தை யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு பெருமையான ஒரு நாளாகும். தளர்ந்திருந்த யாழ். இந்துவின் கொடி மீண்டும் துளிர் விட்டு பறக்க ஆரம்பித்துள்ளதாக, பொது மக்களும், கல்வியலாளர்கள் சமூகமும் தெரிவித்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *