கிளிநொச்சியில் ஆசிரியர் ஒருவரின் தாலிக் கொடி அறுப்பு

கிளிநொச்சி – முரசுமோட்டை, ஏ-35 வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்களால் ஆசிரியர் ஒருவரின் 11 பவுன் தாலிக்கொடி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஏ 35 வீதி, முரசுமோட்டை பகுதியில் பேருந்துக்காகப் பேருந்து தரிப்பிடத்திற்கு சென்ற குறித்த ஆசிரியரின் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் அணிந்திருந்த சுமார் 11 பவுன் தாலிக்கொடியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *