யாழ்.மாநகர மேயர் மணிவண்ணன் காவல்படை உருவாக்கியது சட்டவிரோதமானது! சீ.வீ.கே.சிவஞானம்

யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனினால் காவல்படை உருவாக்கப்பட்டது சட்டவிரோதமானது என வடமாகாண அவைத்தலைவரும், மூத்த நிர்வாக சேவை அதிகாரியுமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

சீ.வீ.கே.சிவஞானம் யாழ் மாநகரசபை ஆணையாளராகவும் நீண்டகாலம் பணியாற்றியிருந்தார்.

மணிவண்ணனால் உருவாக்கப்பட் காவல்படை விவகாரம் குறித்து அவரை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, இதனை தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட ஆளணி, மாநகரசபை வாகன நிறுத்துமிடங்களில் பணம் அறவிடவே மாத்திரமே.

ஆனால் யாழ் மாநகரசபை உருவாக்கியது தண்டப்பணம் அறவிட. மாநகரசபையினால் தண்டப்பணம் அறவிட முடியாது என்றார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *