முல்லைத்தீவில் கூட்டமைப்பு பிரமுகரின் வாகனத்துடன் மோதிய இராணுவ வாகனம்

வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், ரெலோவின் பொருளாளருமான விந்தன் கனகரட்ணம் பயணம் செய்த வாகனம் முல்லைத்தீவு வெள்ளாங்குளம் பகுதியில் இராணுவத்தின் வாகனம் தவறுதலாக மோதியதால் இன்று மதியம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்று, வெள்ளாங்குளம் ஊடாக துணுக்காய் சென்று கொண்டிருந்த விந்தன் கனகரட்ணத்தின் வாகனத்தை, வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் இராணுவத்தின் வாகனம் தவறுதலாக மோதியதால் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *