யாழ்.சங்குப்பிட்டி வீதியில் மீண்டும் ஒரு விபத்து! கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மன்னார் – யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி வீதியில் பூநகரி பகுதியில் அதிகளவிலான விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பூநகரி, வில்லடி பரமன்கிராய் பகுதியில் வீதி சீரற்ற நிலையில் இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்களும், குறித்த வீதியால் பயணிக்கும் சாரதிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன், இருசக்கர வாகனத்தில் வந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவர் குறித்த பகுதியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சற்று முன் சுமார் 8 மணியளவில் குறித்த பகுதியில் மகிழுந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில், மகிழுந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்னிலங்கையை சேர்ந்த தனியார் நிறுவனமொன்றில் அதிகாரிகள் யாழிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த நிலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

எனவே, இவ்வாறு விபத்துக்கள் இடம்பெறும் வீதியின் இப்பகுதியை புனரமைத்து, வரும் காலங்களில் இடம்பெறும், விபத்துகளையும், உயிர் தேசங்களையும் தடுத்து நிறுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென செட்டியகுறிச்சி கமக்கார அமைப்பின் தலைவர் T.ரங்கன் அவர்களும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *