தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேலும் 9 உள்ளூராட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமை நீக்கம்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 9 பேர் அவர்களின் உள்ளூராட்சி உறுப்புரிமையை இழப்பதாக தெரிவித்தாட்சி அலுவலர்களிடமிருந்து கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு யாழ்.மாநகரசபை உறுபினர்களாக தெரிவான 6 பேரும், நல்லூர் பிரதேசசபையின் உறுப்பினர்கள் 3 பேருக்குமே இவ்வாறு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் நல்லூர் பிரதேசசபை தவிசாளர், மணிவண்ணன் தரப்பின் முக்கியஸ்தரான யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
இவர்களை கட்சியை விட்டு நீக்குவதாக தமிழ் காங்கிரஸ் கட்சியினால் தேர்தல்கள் திணைக்களத்திற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களால் உறுப்புரிமையை இழக்கும் அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மணிவண்ணன் தரப்பை பலருக்கு இந்தவிதமான அறிவித்தல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது, அந்த முடிவிற்கு எதிராக அவர்கள் நீதிமன்றத்தை நாடி, தற்காலிக தடயுத்தரவை பெற்றுகொண்டுள்ளனர்.
தற்போது உறுப்புரிமையை இழப்பதாக அறிவிக்கப்பட்டவர்களும் விரைவில் நீதிமன்றத்தை நாடுவார்கள் என தெரிகிறது.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.