இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

டொம் மூடி எதிர்வரும் 3 வருட காலப்பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை மேலும் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கட்டின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து டொம் மூடி பணிப்பாளர் பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் 3 வருட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக டொம் மூடி செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *