அரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பணிக்கு சமூகமளிக்காமல் இருந்த அனைத்து அரசாங்க ஊழியர்களும் மீண்டும் வழமை போன்று பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் திங்கட்கிழமையான நாளையதினம் முதல் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளலர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

கொவிட் – 19 தொற்று காரணமாக கடந்த காலங்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களே சேவைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கொரோனா தொற்றுடன் தற்போது, அனைத்து நடவடிக்கைகளும் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், அமைச்சினால் தற்போது சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சுகாதார வழிமுறைகளின் கீழ், அனைத்து ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தொடர்பிலான நடவடிக்கைகளுடன், மக்களுக்கு தேவையான ஏனைய அனைத்து சேவைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நிறுவன தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து ஊழியர்களையும் நாளை (11) முதல் கடமைக்கு அழைப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளுடனேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஊழியர்களில் கர்ப்பிணி தாய்மார்கள் இருப்பின் அவர்களை வாரத்திற்கு 3 நாட்களுக்கு சேவைக்கு அழைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *