யாழ். நெல்லியடியில் இந்த நிறுவனத்திற்கு சென்றவர்களுக்கு விடுத்துள்ள அவசர கோரிக்கை

யாழ். பருத்தித்துறை நெல்லியடி பகுதியில் உள்ள டயலொக் நிறுவனத்தில் சேவை பெறுவதற்காக கடந்த 30.12.2020ம் திகதி புதன் கிழமை நிறுவனத்திற்கு சென்றவர்கள் உங்களை அடையாளப்படுத்துமாறு கரவெட்டி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களின் ஒத்துழைப்பை கேட்டுள்ளார்.

குறித்த தினத்தில் கொரோனா நோயாளி ஒருவர் காலை 10.30 தொடக்கம் ஏறத்தாழ ஒரு மணிநேரம் டயலொக் நிறுவனத்திற்குள் இருந்துள்ளார்.

அன்றைய தினம் பலர் அங்கு வந்து சென்றுள்ளனர். அதனை நிறுவனத்தின் சீ.சி.ரி.வி கமரா மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றது.

எனவே அன்றைய தினம் நிறுவனத்தில் சேவை பெற சென்றவர்கள் 0212261006 அல்லது 0212226666 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக உங்களை அடையாளப்படுத்தி சமூகத்தினதும் உங்கள் தனிப்பட்ட குடும்பத்தினரும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றையதினம் அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் உண்மை தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும், எனவே தயவுசெய்து இத் தகவலை அலட்சியப்படுத்தாது அனைவரும் கட்டாயம் தம்மை அடையாளப்படுத்துமாறு சுகாதார பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *