வெள்ளவத்தையில் யாழ் இளம் பெண் விபரீத முடிவு; பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வெள்ளவத்தை கடலிலிருந்து சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

நண்பகலளவில் தன்னுடைய ஸ்கூட்டரில் வெள்ளவத்தை மிராஜ் ஹொட்டலுக்கு முன்பாக வந்த குறித்த பெண், மோட்டார் சைக்கிளை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு கடலுக்குள் சென்றதாகவும், சில நிமிடங்களின் பின்னர் கடல் அலைகளில் அவரது சடலம் அடித்து வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடலிலிருந்து அவரது சடலம் பின்னர் மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்டது.

உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்ற நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *