யாழில் பெற்றோரின் கவனக் குறைவால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, அல்வாய் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளான். ஜெபநேசன் சியோன் என்ற 3 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அல்வாய் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வீட்டில் கதிரையில் இருந்த போது தவறுதலாக வீட்டு மேடையில் விழுந்துள்ளான்.

சிறுவன் விழுந்ததை பெற்றோர்கள் பெரிதும் கவனத்தில் எடுக்காத நிலையில், குறித்த சிறுவன் நேற்றைய தினம் தலைப் பகுதி வீங்கி காதுப்பகுதிகள் வலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்தான்.

இதையடுத்து சிறுவனின் தலைப்பகுதியை அவதானித்தனர். அத்துடன் சிறுவனுக்கு காய்ச்சலும் இருந்துள்ளது. இதனால் பெற்றோர் நேற்று மதியம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிறுவனை சேர்த்தனர்.

அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *