கட்டம் கட்டமாக நாட்டினை விடுவிக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையை சீர்ழிக்கும் மக்கள்!

கட்டம் கட்டமாக நாட்டினை விடுவிக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையை மக்களே சீரழிக்கும் விதத்தில் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

மதுபான சாலைகளின் முன்னாள் பொதுமக்களின் செயற்பாடுகள் மோசமாக அமைந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது அரசாங்கம்.

நாட்டில் மதுபான சாலைகளை திறக்க அனுமதி வழங்கிய நிலையில் மக்களின் செயற்பாடுகள் மோசமாக அமைந்துள்ளது. இத்தனை நாட்கள் முன்னெடுத்து வேலைத்திட்டங்கள் அனைத்துமே இதனால் வீணாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

எனவே இதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியார் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்ட போதே இதில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவிக்கையில்,

கொவிட் -19 தாக்கத்தில் இருந்து நாடு இப்போது தான் படிப்படியாக விடுபட்டு வருகின்றது. கட்டம் கட்டமாக நாட்டில் வழமையான செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் அதனை சீரழிக்கும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டால் யாருக்குமே இந்த தாக்கத்தில் இருந்து விடுபட முடியாது போய்விடும்.

சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மீண்டும் இடம் கொடுத்தால் இரண்டாம் சுற்று தாக்கம் ஒன்று உருவாக்கும் என்பது உலகத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மன், சிங்கபூர், கொரியா போன்ற நாடுகளில் முழுமையாக வைரஸ் தாக்கத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்த பின்னர் தேர்தல் நடத்தியும் ஏனைய அனாவசிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டும் மீண்டும் இரண்டாம் சுற்றில் வைரஸ் தாக்கம் உருவாகியுள்ளது.

இலங்கையில் இப்போது கொடுக்கும் சுதந்திரத்தை அனாவசியமாக மக்கள் கையாள நினைத்தால் விரும்பியோ விரும்பாமலோ மீண்டும் கட்டுப்பாடுகளை முன்னெடுக்கவும், அதேபோல் ஊரடங்கு சட்டத்தில் கையாள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை பொலிஸ் மற்றும் அதிரடிப்படையை கொண்டு முன்னெடுக்க வேண்டி வரும். இதில் மதுபானசாலை கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும் என்றார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *