வடபகுதியில் கொரோனாவை மறந்த மக்கள்
கொரோனா வைரஸ் அச்சத்தினால் சமூக இடைவெளியை பேணுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் வரும் சித்திரைப் புதுவருடப் பிறப்பை கொண்டாடுவதற்கான உத்வேகத்தில் மக்கள் கூட்டமாகவும் நெரிசலாகவும் இருந்த காட்சி வடபகுதியில் இன்று காணமுடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடும்முழுவதும் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்ப்பட்டது.
தம்புள்ளை மற்றும் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் மரக்கறி மற்றும் பழவகைகளை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் வவுனியா, கிளிநொச்சி பிரதேசங்களில் விற்பனைகளை இன்று ஆரம்பித்தனர்.
இதனால் மக்கள் முண்டியடித்து வவுனியா, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் கூட்டமாக சந்தைகளில் பொருட்களை வாங்கி சென்றதை அவதானிக்க முடிந்தது.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.