மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு நன்றிகளை தெரிவித்த நாட்டு மக்கள்!

யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டுவந்து நாட்டை அபிவிருத்தி செய்த மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு நாட்டு மக்கள் நன்றி செலுத்தியுள்ளனர்.

30வருட யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டுவந்து நாட்டைப் பாதுகாத்து, நாாட்டினுடைய முன்னேற்றத்திற்காக உழைத்த மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு நாட்டு மக்கள் நன்றி செலுத்தும் வகையில் ஜனாதிபதித் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை கோத்தபாய ராஜபக்சவுக்கு அளித்து, அவரை வெற்றிபெறச் செய்துள்ளனர் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் அமோக வாக்குகளினால் வெற்றிபெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோத்தபாய ராஜபக்சவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஊடகங்களுக்கு (17) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டுவந்து நாட்டைப் பாதுகாத்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு நாட்டு மக்கள் நன்றி செலுத்தும் வகையில் இந்தத் தேர்தலினைப் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை கோத்தபாய ராஜபக்சவுக்கு அளித்து நாட்டு மக்கள் அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர்.

நாட்டுக்குப் பொருத்தமான ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பது, வரவேற்கத்தக்க விடயமாகும்.

அந்த வகையில் நாட்டு மக்களின் பேராதரவினைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

குறிப்பாக, கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்து அவருடைய வெற்றியின் பங்காளிகளாக இருக்கின்ற அத்தனை ஆதரவாளர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதுடன், குறித்த தேர்தலானது அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெறுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய சகல தரப்பினரையும் போற்றுகின்றேன்.

நல்லாட்சி எனும் போர்வையில் ஐக்கிய தேசியக்கட்சியினால் கொண்டு வரப்பட்ட ஆட்சியில், வெளிநாட்டு சக்திகளின் சதிவலையில் நாடு சிக்குண்டு, நாட்டினுடைய இறைமை, பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாக இருந்த, இந்தக்காலப்பகுதியில் நடாத்தப்பட்ட தேர்தலில் நாட்டையும், நாட்டினுடைய வளங்களையும் பாதுகாப்பதற்கு பொருத்தமான ஒருவரை மக்கள் தெரிவு செய்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *