21 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள்

காரைதீவிலிருந்து ஆழ்கடலுக்குச் சென்று காணாமல்போன மீனவர்கள் மூவர் 21 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு அப்பாலுள்ள சர்வதேச கடற்பரப்பில் மீனவர்கள் மற்றும் அவர்களின் இயந்திரப்படகு என்பன நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்களை யாழ்.கரைக்கு அழைத்து வரும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், காணாமல்போன மூன்று மீனவர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.சாய்ந்த மருதைச் சேர்ந்த 36 வயதுடைய சீனிமுகம்மது ஜூனைதீன், 37 வயதுடைய இஸ்மாலெவ்வை ஹரீஸ், 47 வயதுடைய சண்முகம் சிறிகிருஸ்ணன் ஆகிய மூவரே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *