ஸ்பெயின் நாட்டில் நிர்வாண உணவகம்: காதலர்கள் குஷி

ஸ்பெயின் நாட்டில்  டி லியோனார்டிஸ் என்ற பெயரில் நிர்வாண உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் காதலன் காதலி, கணவன் மனைவி மட்டுமே அனுமதிக்கப்படுவர்

இந்த உணவகத்தின் வாசலில்யே உணவருந்த வருபவர்கள் தங்கள் உடைகளை களைந்து ஓட்டல் நிர்வாகியிடம் கொடுத்துவிட வேண்டும். அதுமட்டுமின்றி அமைதியாக உணவுகளை உண்டு ரசிக்கும் வகையில் செல்போனையும் கொடுத்துவிட வேண்டும்

பின்னர் அவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உள்ள டேபிளில் அமர வைக்கப்பட்டு அவர்களிடம் உணவு வகைகள் ஆர்டர் எடுக்கப்படும். உணவு பரிமாறும் சர்வரும் நிர்வாணமாகவே உணவுகளை வழங்குவார். முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களுக்கு மன நிம்மதியை கொடுப்பதே இந்த ஓட்டலின் கொள்கையாம்