நேரலையின் போது மயங்கி சுருண்டு விழுந்த பெண் நிருபர் (வீடியோ)

பாகிஸ்தானில் பெண் நிருபர் ஒருவர் நேரலையில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் பி.டி.ஐ கட்சியின் பெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதை தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நேரடி ஒளிப்பரப்பு செய்துக்கொண்டிருந்த இர்ஷாகான் என்ற பெண் நிருபர் பேசிக்கொண்டிருக்கும் பொதே திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

கீழே விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சில ஊடகங்களில் இவர் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. யூடியுப் தளத்தில் இணைக்கப்பட்டுள்ள வீடியோ தலைப்பில் கூட இவர் இறந்துவிட்டதாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர் இறந்துவிட்டதாக கூறப்படும் செய்திகள் அனைத்தும் வதந்தி.