மேஜிக் என்ற பெயரில் பெண்களிடம் சில்மிஷம் செய்த வாலிபர்

சீனாவில் மேஜிக் என்ற பெயரில் பொதுஇடத்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்த வாலிபரை கவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சீனாவை சேர்ந்த சினா வெய்போ என்ற வாலிபர் தனது சமூக வலைதளத்தில் அவர் மேஜிக் செய்த வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில், அவர் சாலையில் செல்லும் பெண்களிடம் மேஜிக் என்ர சில்மிஷம் செய்துள்ளார்.

வீடியோவில் அந்த வாலிபர், பெண்களிடம் நாணயம் மூலம் மேஜிக் செய்யலாமா என கேட்கிறார். சம்மதம் தெரிவிக்கும் பெண்களின் மார்பகத்தின் மீது நாணயத்தை வைத்து அழுத்துகிறார்.

மேலும் அந்த வாலிபர் இதே போன்று இதற்கு முன் பெண்களிடம் மாதவிடாய் குறித்து கேள்வி கேட்கும் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்துள்ளது தெரிவந்துள்ளது. இந்த வீடியோக்கள் வைரலாக அந்த வாலிபர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்நிலையில் காவல்துறையினர் அந்த நபரை கண்டறிந்துவிட்டதாகவும், பெண்கள் அவர் மீது புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.