பிரகாஷ் ராஜை பற்றி வெளியே சொல்ல முடியாத நிலையில் உள்ளேன்; வருந்தும் ஸ்ரேயா

பிரகாஷ் ராஜுடன் சேர்ந்து நடித்தபோது இருவரும் எங்களுக்குள் இயக்குநரை குறை கூறி பேசிக் கொள்வோம். ஆனால் இப்போது அவரே இயக்குநராக இருப்பதால் என்னால் எதுவும் கூற முடியவில்லை என நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

மலையாள படமான சால்ட் அன்ட் பெப்பர் படத்தின் ரீமேக்தான் தமிழில் வெளியான உன் சமையல் அறையில் திரைப்படம். இந்த படத்தை பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்தார். தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். இந்தியிலும் பிரகாஷ் ராஜ்தான் இயக்குகிறார். ஆனால் பிரகாஷ் ராஜ் நடித்த கதாபாத்திரத்தில் நானா படேகர் நடிக்கிறார்.

சிநேகா கதாபாத்திரத்தில் ஸ்ரேயே நடிக்கிறார். தமிழில் இசையமைத்த இளையராஜா தான் இந்தியிலும் இசையமைக்கிறார். பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் நடிக்கும் நடிகை ஸ்ரேயா கூறியதாவது:-

நான் பிரகாஷ் ராஜுடன் சேர்ந்து நடத்தபோது, இருவரும் எங்களுக்குள் இயக்குநரை குறை கூறி பேசிக் கொள்வோம். ஆனால் இப்போது அவரது இயக்கத்தில் நடிப்பதால் என்னால் எதுவும் கூற முடியவில்லை. படத்தின் துணை இயக்குனர்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றார்.