நயன்தாராவிடம் கெஞ்சும் சங்கமித்ரா டீம்

சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதை தொடர்ந்து அனுஷ்காவும் மறுத்து விட்ட நிலையில் தற்போது படக்குழு நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். 

மெகா பட்ஜெட்டில் சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா திரைப்படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகம் செய்து வைத்தனர். சங்கமித்ரா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த ஸ்ருதி ஹாசன் படத்தில் இருந்து விலகினார். அவரைத்தொடர்ந்து இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவிடம் கேட்கப்பட்டது.

தற்போதுதான் பாகுபலி படத்தை முடித்துவிட்டு வந்துள்ளேன் மீண்டும் இரண்டு வருடமா என கூறி மறுத்து விட்டார். இதனிடையே ஸ்ருதி ஹாசன் படத்தில் இருந்து விலகியவுடன் சுந்தர்.சி ஹன்சிகாவை பரிந்துரை செய்துள்ளார். ஆனால் மார்க்கெட் இல்லாத ஹன்சிகா வேண்டாம் என தயாரிப்பாளர் கூறிவிட்டாராம்.

இதனால் தற்போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை விட்டால் வேறு யாரும் கிடையாது என அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். நயன்தாரா கேட்கும் தொகையை சம்பளமாக கொடுக்க படக்குழு தயாராக உள்ளதாம். ஆனால் நயன்தாரா சற்று தயக்கம் காட்டி வருகிறாராம்.

கை நிறைய படங்களுடன் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நயன்தாரா, தனது பிற படங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தேதி கேட்டாள் நடிக்க உள்ளாராம்.