சோழர் காலத்தை போன்று வடமாகாண அவைத்தலைவருக்கு சிம்மாசனம்!

மிகவும் நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய புதிய சிம்மாசனம் ஒன்று வட மாகாண அவைத்தலைவருக்கு உருவாக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற வடமாகாண சபை அமர்வின் போது புதிய சிம்மாசனத்தை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோழர் காலத்து அரசர்கள் பயன்படுத்தியதை போன்று மிகவும் நுட்பமான முறையில் அமைக்கப்பட்டுள்ள ஆசனத்தை மாகாண சபை உயர் அதிகாரி ஒருவர் பயன்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.