பாகுபலியாக மாற துடிக்கும் வனமகன்!!

நடிகர் ஜெயம் ரவி தற்போது சங்கமித்ரா படத்தில் நடிக்க 2 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஒரு காரணம் பாகுபலியின் வெற்றி என்றே கூறலாம்.

சுந்தர் சி. இயக்கத்தில் உருவாகும் சரித்திரப் படம் சங்கமித்ரா. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்கிறார்கள். சம்மிபத்தில் ஸ்ருதி ஹாசன் படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

சங்கமித்ரா படத்திற்காக ஜெயம் ரவி 2 ஆண்டு கால்ஷீட் கொடுத்துவிட்டார் என தெரியவந்துள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

பாகுபலி போல சங்கமித்ரா படத்தையும் பெரிய அளவில் கொண்டு செல்ல பிரபாஸ் போல தானும் உழைக்க வேண்டும் என நினைக்கிறாராம் ஜெயம் ரவி.