வனமகன் 2 நிமிட வீடியோ காட்சி

விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘வனமகன்’ படத்தின் 2 நிமிட காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா நடித்துள்ள படம் ‘வனமகன்’. டார்ஜானைப் போல, காட்டுக்குள்ளேயே பிறந்து வளர்ந்தவராக நடித்துள்ளார் ஜெயம் ரவி. காட்டில் பிறந்தவர் என்பதால், அவருக்குப் பேசவராது. படம் மூலம் சைகை மற்றும் சப்தங்கள் மூலமாகவே பேசி நடித்துள்ளார். இது, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 50வது படம்.

தற்போது வனமகன் படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது. காட்டில் இருந்து நகரத்திற்குள் வந்த ஜெயம் ரவி எப்படி நடந்து கொள்கிறார் என இந்த வீடியோவில் உள்ளது.