ஹீரோயினுக்காக அலையும் பிரபு சாலமன்

கும்கி 2 படத்தின் முதற்கட்ட வேலைகள் தொடங்கிய நிலையில் ஹீரோ, ஹீரோயின் கிடைக்காமல் அலைந்துக் கொண்டிருக்கிறாராம் இயக்குநர் பிரபு சாலமன்.

விக்ரம் பிரபு, லக்‌ஷ்மி மேனன் ஆகியோர் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கிய கும்கி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து தற்போது பிரபு சாலமன் கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். தொடரி படம் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை.

தற்போது தமிழ் சினிமாவில் ஹிட்டான படங்களை இரண்டாம் பாகம் எடுப்பது ட்ரண்ட் ஆக உள்ளது. இந்நிலையில் கும்கி 2 படத்திற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. இதில் டாக்டர் ராஜசேகர் மகள் ஷிவானி ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார் என்று முதலில் தகவல்கள் வெளியானது. இந்த தகவலை பிரபு சாலமன் முற்றிலும் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கும்கி 2 படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கிவிட்டது. லோகேஷன் பார்த்து முடிவு செய்துவிட்டோம். ஹீரோ, ஹீரோயின் கிடைக்கவில்லை, தேடிக்கொண்டு இருக்கிறேன், என்றார்.