கிளிநொச்சியில் திருவள்ளுவர் சிலை திறந்து வைப்பு

உலகின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கையின் வடகிழக்கில் 16 திருவள்ளுவர் சிலைகள் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சியில் இன்று திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கும் நிகழ்வும் 15 ஆவது திருக்குறள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு மாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி மகாவித்தியாலய சந்தியிலிருந்து ஆரம்பமாகி கரைச்சி பிரதேச சபை வளாகம் வரை திருவள்ளுவரின் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இதன் போது இந்தியாவிலிருந்து வருகைத்தந்து உலக தமிழ்ச்சங்கத்தின் தலைவர் விஜேபி மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் குறித்த நிகழ்வுக்கு வடமாகாண முதலமைச்சர் முதன்மை விருந்தினராக பங்கு கொள்ளவிருந்த போதிலும் அவர் வருகைத்தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.