மூன்று இளைஞர்கள் திருமணம்: ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் கொடுமை

ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்வதையே இன்னும் இந்தியா போன்ற சில நாடுகள் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இயற்கைக்கு முரணான இந்த விஷயத்தை அங்கீகரிக்க பல நாடுகள் தயங்கி வருகின்றன. இந்த நிலையில் கொலம்பியா நாட்டில் மூன்று இளைஞர்கள் திருமணம் செய்து கொண்டதை அந்நாடு அங்கீகரித்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியா‌ சமீபத்தில் மூன்று ஆண்கள் திருமணம் செய்து கொண்டதை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது.

ஒருவர் கணவராகவும் மீதமுள்ள இருவரும் அவரது துணைவராகவும் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் இந்த திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று பேர் செய்து கொள்ளும் திருமணம் ஆங்காங்கே நடைபெறுவதாகக் கூறப்பட்டாலும் முதல்முறையாக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுவது இதுவே முதல் முறை.என்பது குறிப்பிடத்தகக்து.