தமிழரசுக்கட்சி தலையிட இரு அமைச்சர்கள் கோரிக்கை

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை விடயத்தின் தொடர் நடவடிக்கையில் இலங்கை தமிழரசு கட்சி தலையிட வேண்டும் என கல்வி அமைச்சர் குருகுலராஜா, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் கோரியுள்ளனர்.

இந்த கோரிக்கையை நேற்றைய தினம் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று அவர்கள் விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையின் தொடர் நடவடிக்கை குறித்து முதலமைச்சரின் முடிவுக்கு கட்டுப்படுவது என தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடனான அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

வடக்கு அறிக்கையின் தொடர் நடவடிக்கை குறித்து முதலமைச்சரின் முடிவுக்கு கட்டுப்படுவது என தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடனான அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை சமர்ப்பிதற்கான விசேட அமர்வு நாளைய தினம் கூடுவதற்கு முன்னர் மாட்டீன் வீதியில் அமை ந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று திடீர் சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பு தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தலைமையில் நடை பெற்றதோடு, தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிரு ந்தனர்.  வடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாடுக்கள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கை தற்போது வெளிவந்துள்ள நிலையில்,

அதில் இரண்டு அமைச்சர்கள் முறைகே ட்டில் ஈடுபட்டவர்களாக கூறப்பட்டுள்ளது. இதன்படி அவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்து புதிய அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும் என ரெலோ தனது நிலைப் பாட்டை அறிவித்துள்ளது. எனினும் புளொட், தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியன தமது கட்சி நிலைப்பாடுகளை தெரிவிக்காத நிலையில், தமிழரசு கட்சி கூடி ஆராய்ந்துள்ளது. அதில் குறித்த விடயம் தொடர்பில் தலையிடுவது இல்லை எனவும், முதலமைச்சர் மேற்கொள்ளும் தீர்மானமே இறுதி தீர்மானம் எனவும் தமது நிலைப்பாட்டை முன்னர் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் மாவை சேனாதிராசாவிடம் நேரில் சென்ற தமிழரசு கட்சியை சேர்ந்த இரு அமைச்சர்களும் இந்த விசாரணை அறிக்கையால் தாம் மன உளைச்சல்களை எதிர் நோக்கியிருப்பதாகவும், இந்த விசாரணை அறிக்கை முறையற்றது. எனவே இது தொடர்பில் கட்சி தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்பு ஒரு முடிவொன்றை எடுக்கவுள்ளதாகவும் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.