குறுகிய சாலையில் அதிவேகமாக டிரைவ் செய்பவரா? இந்த விடியோ பாருங்க!!

சிறிய சாலை ஒன்றில் அதிவேகமாக கார் ஓட்டியதால் விபத்துக்குள்ளாகிய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மூடபித்ரி மூங்கில் காடுகளால் நிறைந்த ஊராகும். அங்கு இப்போது மழை காலம் வேறு. இந்நிலையில், வாகன ஓட்டி ஒருவர் அதிவேகமாக காரை இயக்கி ப்ரேக் பிடிக்கும் போது கட்டுபாட்டை இழந்து சாலையில் இருந்த காம்பொண்ட் சுவர் ஒன்றில் மோதி, பின்னர் சாலையில் இருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துகுள்ளான சம்பவம் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ காட்சிகள்...